Image

நவம்பர் 1, 2012 at 5:53 பிப (Uncategorized)

Image

இருளடங்கும் வெளி
காட்சிக் குளமை
மரம்
செடி, பூ, புல்
வாகனம் கழுவும் பணிப்பெண்
புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் துண்டு
காத்திருக்கும் வெற்றிருக்கை
முகம் தெரியாமல் யாரோ சிலர்
தார்ச்சாலையில் வாகனங்கள்
எதிரே வரும் மிதிவண்டி ஓட்டி
வேற்று மொழியில் பேச்சுக்குரல்
சிறுபிரிவு வலிப்பதாய் முத்தப் பகிர்வு
பள்ளி செல்லும் சிறுவர்கள்
பேருந்து நிறுத்தத்தில் பயணிகள்
நான் கடக்கும் வெளியில்
தினமும் காலை 6.30க்கு…

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

Image

நவம்பர் 1, 2012 at 5:50 பிப (Uncategorized)

Image

இன்று தீர்ந்துபோனது

ஏதோ இன்று விடிந்தது
இருளடங்கும் வெளி
வீட்டைவிட்டு வெளியாகினேன்
எங்கிருந்தோ வரும் பறவைச் சத்தம்
அங்கிமிங்கும் சிலர்
தொடர்வண்டியில் சிறு பயணம்
நெரிசல் மனிதர்களில் நானும்
நண்பர்களிடம் உரையாடல்
அலுவலகம்
தொலைபேசி குறுந்தகவல்கள்
அலைச்சல் அலைக்கழிப்பு
சில சமயம் பதட்டம்
சில சமயம் பயம்
குறிப்பிட்ட நேரத்தில் உணவும் ஓய்வும்
எல்லாம் கடந்தபடி
காலம் மாறத்துவங்கியது
பணியிடம் விலகி
அறைக்குச் செல்கிறேன்
இரவு வர
இன்று தீர்ந்துபோனது

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

Image

நவம்பர் 1, 2012 at 5:50 பிப (Uncategorized)

Image

இன்று தீர்ந்துபோனது

ஏதோ இன்று விடிந்தது
இருளடங்கும் வெளி
வீட்டைவிட்டு வெளியாகினேன்
எங்கிருந்தோ வரும் பறவைச் சத்தம்
அங்கிமிங்கும் சிலர்
தொடர்வண்டியில் சிறு பயணம்
நெரிசல் மனிதர்களில் நானும்
நண்பர்களிடம் உரையாடல்
அலுவலகம்
தொலைபேசி குறுந்தகவல்கள்
அலைச்சல் அலைக்கழிப்பு
சில சமயம் பதட்டம்
சில சமயம் பயம்
குறிப்பிட்ட நேரத்தில் உணவும் ஓய்வும்
எல்லாம் கடந்தபடி
காலம் மாறத்துவங்கியது
பணியிடம் விலகி
அறைக்குச் செல்கிறேன்
இரவு வர
இன்று தீர்ந்துபோனது

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

நவம்பர் 1, 2012 at 5:43 பிப (Uncategorized)

படம்#    பிம்பம் கடந்து
           நினைவுகள் தாங்கும் காலங்கள்போல்
           வாழ்வின் பெரும்பகுதி
           நாம் விட்டுச்சென்றவையே
           இன்னும் சுவடுகள் உள்ளது
           ஈரமாகவே…!

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

நவம்பர் 1, 2012 at 5:35 பிப (Uncategorized)

நேசம் நினைத்து
அதன் வழி வரும் வெளிப்பாடுகளினால்

கண்ணில் நீர் திரளபடம்

முகமுகமாய்
காணத்துடிக்கிற மனசு

நினைத்ததும் முடியாதது போல்
தூரங்களிட்ட அணை

பிரிவுகளினால்
உருவங்கள் தனித்தனியே

நம்மை நாமே இழந்தும்

எப்படியிருக்கிறாயோ…? என்ற
தவிப்பு ஏக்கங்களில் சந்தித்துக்கொண்டே

வசிக்கிறோம்
இன்னும்.

-அறிவுநிதி-

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

நவம்பர் 1, 2012 at 9:13 முப (Uncategorized)

தவறிடும் பொருளின் சத்தங்கள்
உன் பெயரின் முனங்களாகவே என்னை
ஆச்சர்யப்படுத்துகிறது
குழந்தை போல குறும்பு செய்கிறாய்
என் திசைகாட்டி சிரிக்கிறாய்
என் விரல் பற்றியே நடக்கிறாய்
பூக்கள் கண்டால் அடம்பிடிக்கிறாய்
வண்ணத்துப்பூச்சியை
வீட்டிற்கு அழைக்கிறாய்
கதவிற்குப் பின்னால் ஒழிந்துகொண்டு மிரட்டுகிறாய்
விரட்டி அடித்தால்
காலைப்பிடிக்கிறாய்
பசியாற்ற நிலவைக் காட்டினேன்
என்னை தின்று முடிக்கிறாய்

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

நவம்பர் 1, 2012 at 9:11 முப (Uncategorized)

கவிதை: அறிவுநிதி

           #  உன் ஸ்பரிசம் ததும்பும்
              விழிகள் தவிர்த்து
              நான்
              இறுகப்பற்றும்  என்  கரங்களுக்குள்
              நீ நழுவிச்செல்கிறாய்
              உன்னை நுகர்கிறேன்
              என் சுவாசத்தின் பெரும்பகுதி
              நீ…!

          #  காட்சிப் படிமம்
              திரலும் திசையில்
              நீ வந்து போகிறாய்- நான்
              கண்பொத்தி  உலகம் தரிசிக்கிறேன்

          #  நான் தேடும் திசைகளில்
              நீ இருப்பதில்லை
              மழை எனக்கு பிடிக்கும் என்பதால்
              நீ எங்கோ
              நனைந்து கொண்டிருப்பாய்…!

          #  நான் விழித்துக்கொள்வேன்
              உன் விரல்
              என் மௌனத்தை
              மெல்ல  வருடும்போது…!

         #   ஏதேதோ சொல்ல நினைத்து
               உன் பெயரை சொல்லி முடித்தேன்
               விழிகளால் வீழ்த்தி
                நகம் கடித்த நானங்களோடு
               வன்முறை  துவங்குகிறது…!

         #   ஒரு கணம்
              விழி உறைந்து
              நான் உடைந்து
              உன் சாயலில்
              எனைக் கடக்கும் யாரோ… !

         #    உயிர் உருகும்
               உடல் பருக
               விழி மூடி
               இருள் தரிசனம்…!

         #    நீ அழைக்கும் தூரத்தில்
               நான் இருக்கின்றேன்
               இன்னும்
               உன்னில்  சாந்தம்  பிறக்கவில்லை     
               நான் செல்லும்  வெளியைப் பார்
               மரணத்தின் வாசல் திறந்தே                                  கிடக்கிறது… !

         #    திறந்த விழியினூடே
               விரக்தி பெறுகி
               வேர்த்து வழிகிறது நினைவு…!
     

 

Mail Search

WelcomeInboxNewFoldersMail Options

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

ஜூன் 15, 2010 at 9:35 முப (கவிதை)

மௌனத்தடங்கள் உடைத்து
உயிர்பெயர்க்கும் சுமூகமாக
ஆழ்ந்த உறக்கம் கண்காணாமல்
திகட்டாத இன்பம் அருந்தி
திறந்தே கிடக்கும் துயரம்
யுத்தங்களுக்கு மத்தியில்
சமாதானத்தின் நிமித்தம்
கருவரையில்லாமலே பிரசவிக்கும்
அதன் வார்த்தைகள்
நிலவிற்கு ஒப்பிடும்
நிஜத்தின் பொய்யாக்கம்
#

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

ஜூன் 6, 2010 at 9:03 முப (கவிதை)

எப்படியாவது ஒரு கவிதையெழுதிவிடவேண்டுமென்று
தனிமை கருதி
மாடிப்படியில் அமர்கிறேன்
அங்கு என் தனிமையைக் கலைக்கும் விதமாய்
என் கை தொலைபேசி துடிக்கிறது
அதில் நீதி வருகிறான்
நான் பதிலாகிறேன்
அவனும் ஒரு கவிதை சொல்கிறான்
என் கருத்தும் அவன் கவிதையை சூழ்கிறது
துண்டிக்கப்பட்ட கை தொலைபேசியும்
புகைக்கப்பட்ட சிகரெட் துண்டும்
இறந்தது போல் கிடக்கிறது
கவிதைக்கான சொல் தேடுகிறேன்
எந்தச் சொல்லும் அமையவில்லை
உனக்கும் எனக்குமான சொல்
வாழவைக்கும் சொல்
வதைக்கும் சொல்
வலிக்கும் சொல்
சாகடிக்கும் சொல்லென
எல்லாச் சொற்களும் என்னிடம் இருக்கிறது
ஆனால்
அந்த சொற்களை பயன்படுத்தத் தெரியவில்லை
சொற்கள் தான் கவிதையின் பலம்

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

வார்ப்பு இணையம்

ஒக்ரோபர் 9, 2007 at 3:35 முப (இணையத்தில் இவனும்)

1.       அறிவுநிதி

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

Next page »